Monday, 14 September 2009

உண்மை காதல்

செதில் செதிலாய் செதிக்கினலும்
செல்கள் எல்லாம் செத்தாலும்
சொல்லாமல் வருவது உண்மை
காதல்...

காதலை
என்றும் மறவாதிரு
என்றாவது மறந்திரு
சத்தியமாக அன்று
இறந்து விடு....

Saturday, 12 September 2009

கால் நனைக்கிறேன்

கரையோரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நானும் இன்று வலையுலகம் என்னும் இந்த மகாசமுத்திரத்தில் கால் நனைக்கிறேன்.
சிலிர்ப்பும், குதூகலமும் பற்றிக்கொள்ள கொஞ்சம் அங்குமிங்கும் ஓடித்திரிய ஒரு குழந்தை போல ஆசை. அவ்வளவுதான். மூழ்கிக் குளிக்கவோ, முத்தெடுக்கவோ எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை.

இன்னும் தைரியமும், அனுபவமும் கூடட்டும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.